சர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி

சர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நாதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கதனுக்கு – சர்

1. ஆதி சருவேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்,
அகில பிரகாசனுக்கு, நேசனுக்கு மங்களம்,
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சர்

2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்,
வளர்கலை கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்,
கானான் நல் நேயனுக்கு, கன்னி மரி சேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – சர்

3. பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்,
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்,
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பக்தர் உபகாரனுக்கு, பரம குமாரனுக்கு – சர்



sar eesu nadhanukku jayamangkalam, aathi
thiriyeka nadhanukku supamangkalam
bareru nadhanukku parama porbadhanukku
nereru podhanukku niththiya sangkadhanukku – sar

1. aathi saruvesanukku, iisanukku mangkalam,
akila pirakasanukku, nesanukku mangkalam,
neethiparan balanukku niththiya kunalanukku
oothum anukulanukku uyar manuvelanukku – sar

2. manabi mananukku vananukku mangkalam,
valarkalai kiyananukku, njananukku mangkalam,
kanan nal neyanukku, kanni mari seyanukku,
konar sakayanukku kuru bethdhaleyanukku – sar

3. paththu ladchanathdhanukku suthdhanukku mangkalam,
parama padhathdhanukku, nithdhanukku mangkalam,
saththiya visatharanukku saruvathikaranukku
pakdhar upakaranukku, parama kumaranukku – sar